தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலர் ஜெயராமன் தலைமையில் இன்று (செப்.9) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டியை நேரில் சந்தித்து விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஆட்சியரிடம் மனு! - கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஆட்சியரிடம் மனு
கிருஷ்ணகிரி : ஓசூர், கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
அதில், "ஓசூர் கெலவரப்பள்ளி அணை முழுவதும் நிரம்பி உள்ளதால், அந்த அணையில் இருந்து சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஒமதேப்பள்ளி ஏரி, கவுண்டனூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு அணையின் இடது புற கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மாநிலத் தலைவர் சின்னசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக புதியதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற ஜெயச்சந்திர பானு ரெட்டிக்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.