தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி தொழிலாளி உயிரிழப்பு - muniyappan died

தேன்கனிக்கோட்டை: எருதுவிடும் விழாவை காணச்சென்ற முனியப்பா என்பவர் மாடு முட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி உயிரிழந்த தொழிலாளி
எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி உயிரிழந்த தொழிலாளி

By

Published : Mar 2, 2020, 9:52 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மல்லிகார்ஜுனர மலையில் அமைந்துள்ளது துர்க்கத்தில் ஈஸ்வரன் கோயில்.

இக்கோயிலின் தேர்திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் விழா நடைப்பெற்றது. அதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அப்போது ஒரே ஒரு மாடு மட்டும் திடீரென பொதுமக்களின் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் பதறிப் போன பொதுமக்கள் நாலாபுறமும் ஓடினர்.

அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த தொழிலாளி முனியப்பாவை காளை முட்டி தனது கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி உயிரிழந்த தொழிலாளி
மற்றொரு பக்கம் திரும்பி எதிர்த்திசையில் வந்த காளை நேருக்குநேராக மோதி உயிரிழந்தன. மேலும் காளைகள் முட்டியதில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கிருஷ்ணகிரியில் தேர்தல் பார்வையாளர் நேரில் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details