தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்ஜினியர் குடும்ப தற்கொலை: 9 நாட்களுப்பின் குழந்தை சடலம் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி: ஓசூர் தர்கா ஏரியில் என்ஜினியர் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஒன்பது நாட்கள் தேடுதலுக்கு பிறகு, குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

குழந்தை சடலம் மீட்பு

By

Published : Jul 7, 2019, 9:40 AM IST


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(30). இவரது மனைவி கல்பனா(27). இவர்களது 2 வயது மகன் கபிலன். கர்நாடக மாநிலம், பொம்மசந்திராவில் குடும்பத்துடன் வசித்து வந்த கண்ணன், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் திட்ட அலுவலக என்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 26ஆம் தேதி குடும்பத்தோடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு கண்ணன் வந்தார். அதன்பின், ஜூன் 29ஆம் தேதி தர்கா ஏரியில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவம் இடம் சென்று கண்ணன், அவரது மனைவி ஆகியோரின் உடலை மீட்டனர். குழந்தை உடல் கிடைக்காததால், கடந்த ஒன்பது நாளாக ஏரியில், தீயணைப்புத்துறையினர், மீனவர்கள் உதவியுடன் தேடி வந்த நிலையில், நேற்று குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பின்னர், உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கண்ணன் தற்கொலை குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஐபிஎல் சூதாட்டத்தில் பணம் பறிப்போன துயரத்தில், கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இன்ஜினியர் குடும்பத்தோடு தற்கொலை விவகாரத்தில்: இன்று குழந்தை சடலம் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details