தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராமத்தை சுற்றி வரும் காட்டுயானைக் கூட்டம்! - வனத்துறை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள கிராமப் பகுதியை சுற்றி காட்டுயானைகள் அதிகம் உலா வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

elephant

By

Published : Jun 26, 2019, 12:55 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட சானமாவு, போடூர் பகுதிகளில் முகாமிட்டிருந்த காட்டுயானைகள் கடந்த மாதம் கர்நாடக வனப்பகுதிக்குள் சென்றிருந்தன.

இந்நிலையில் இன்று காலை கர்நாடக வனப்பகுதியிலிருந்து வந்த ஆறு யானைகள், தமிழ்நாடு எல்லையான பேரிகை அடுத்த சின்னாரன்தொட்டி கிராமப் பகுதியில் சுற்றி வருகின்றன.பகல் நேரத்திலும் வனப்பகுதிக்குள் செல்லாமல் உள்ள யானைகளை கண்காணித்து வரும் வனத்துறையினர், பேரிகை சுற்றுகிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆடு மாடு மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ஆறு காட்டு யானைகள் கொண்ட கூட்டத்தை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிரமான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராமத்தை சுற்றி வரும் காட்டுயானைக் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details