ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட குள்ளட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தப்பா (65). இவர் இன்று காலை தனது கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றா.
காட்டு யானை தாக்கி முதியவர் மரணம்!! - காட்டுயானை
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
காட்டுயானை தாக்கி முதியவர் மரணம்!!
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த காட்டுயானைகளில் ஒன்று கோவிந்தப்பாவை கண்டு அவரை துரத்தி தாக்கியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.