கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசன். இவர் கெலமங்கலம் மின்சார வாரிய அலுவலகத்தில், இலவச மின்சார இணைப்புப் பெற கடந்த 2001 ஆம் ஆண்டு விண்ணப்பம் செய்துள்ளார். இதனையடுத்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அவருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க ஆணை வந்துள்ளது.
இதனை விசாரித்த மின்வாரிய இளநிலை பொறியாளர் தென்னரசி என்பவர் விவசாயி வெங்கடேசனிடம் இலவச மின்சார இணைப்பு வழங்க 30 ஆயிரம் ரூபாய் கையூட்டு வழங்க வேண்டும் எனக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை விரும்பாத விவசாயி வெங்கடேசன் இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.