நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக ஒசூரு தொழில் உற்பத்தி மண்டலம் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் பொருளாதார மந்தநிலை காரணமாக ஓசூரு மண்டலத்தில் உற்பத்தி விழுக்காடு, எந்த அளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளது என்பதை சிறு, குறு உற்பத்தியாளர்களான பி.வி வெங்கடேஸ்வரன், சத்தியவாகீஸ்வரன் ஆகிய இருவரும் ஈடிவி பாரத்திடம் பகிர்ந்து கொண்டனர்.
சத்தியவாகீஸ்வரன் கூறுகையில், ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால் தற்பொழுது ஓசூரில் உற்பத்தி, ஏற்றுமதி பற்றாக்குறை என 30 முதல் 40 விழுக்காடு வரை குறைந்துள்ளது. குறிப்பாக உபர், ஓலா உள்ளிட்ட வாடகை கார் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்றுமதி தொடர்பான சிறு சலுகைகளை வழங்கி உள்ளார். ஆனாலும் ஜிஎஸ்டி வரியை 28 விழுகாட்டிலிருந்து 18விழுக்காடாக குறைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்ய வேண்டும்.