தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போராட்ட களத்திற்கு டிராக்டர் ஓட்டி வந்த பிரேமலதா - மேகதாது அணை பிரச்னை

தமிழ்நாடு - கர்நாடக மாநில மக்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட கூடாதென்றால், மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடந்த ஆர்பாட்டத்திற்கு, பிரேமலதா டிராக்டர் ஓட்டி வந்தது, கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்

By

Published : Aug 20, 2021, 9:54 PM IST

கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி, ராம்நகரில் தேமுதிக சார்பில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மினி டிராக்டரை ஓட்டியவாறே வருகை தந்தார். பிரேமலதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜய பிரபாகரன், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தேமுதிகவினர் பங்கேற்றனர்.

டிராக்டர் ஓட்டிய பிரேமலதா விஜயகாந்த்

இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தமிழ்நாடு வறண்ட பூமியாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் 7 மாவட்டங்கள் நீரின்றி பாலைவனமாகிவிடும்.

காவிரி நீரை நம்பியே தமிழ்நாடு உள்ளது. இரண்டு மாநில மக்களும் ஒற்றுமையோடு உள்ளனர். நீரால் மட்டும் ஏன் நமக்குள் பிரிவினை என்பதை அரசுகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

போராட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

தமிழ்நாடு - கர்நாடகம் மாநில மக்களுக்கு இடையே பிரச்னை ஏற்படக்கூடாதென்றால், மேகதாதுவில் அணைக்கட்டக் கூடாது. அணைக்கட்டாமல் கவனித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்

ABOUT THE AUTHOR

...view details