கிருஷ்ணகிரி:ஓசூர் மாநகராட்சி, இராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சாப்பிட வழங்கப்படும் இட்லி ரப்பர் போல உள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு கெட்டுப்போகாமல் அப்படியே உள்ளதாகவும் கூறி வாடிக்கையாளர்கள் உணவக உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த உணவகத்தில் கடந்த சில மாதங்களாகவே, இது போன்ற இட்லிகள் விற்பனை செய்து வருகின்றனர் என்றும்; இந்த இட்லிகளை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது எனவும்; சிறு குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறி அவர்கள் உணவகம் நடத்துபவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, 'அவர்கள் தங்களுக்கு வேறு இடத்திலிருந்து இட்லி குறைந்த விலைக்கு வருவதாகவும்; அதனை தாங்கள் சட்னி, சாம்பாரோடு விற்பனை செய்து வருகிறோம். இந்த இட்லியில் ஆமணக்கு விதை மட்டுமே கலக்கப்படுகிறது' எனத் தெரிவித்தனர். ஆனாலும், வாடிக்கையாளர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
கடையில் இட்லி சாப்பிட வந்த வாடிக்கையாளர் கூறும் போது, 'தொடர்ந்து இது போன்ற இட்லிகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த இட்லிகளை விற்காதீர்கள் என்று கூறியும் தொடர்ந்து விற்று வருகின்றனர். ஓசூர் பகுதிகளில் உள்ள ஏராளமான உணவகங்களில் இதுபோன்ற ரப்பர் இட்லிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.