தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

20 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிவருபவரின் போலி சான்றிதழ் கண்டுபிடிப்பு! - fake certificates

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் அருகே போலி சான்றிதழ் கொடுத்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக 20 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் நபர் சிக்கியுள்ளார்.

ராஜேந்திரன்
ராஜேந்திரன்

By

Published : Oct 15, 2020, 11:37 AM IST

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள மிட்டப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கிவருகிறது. இதில், கதிரிபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (52) ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

இவர், போலி சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்ததாக, குண்டலபட்டியைச் சேர்ந்த மாதேஷ், 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். அப்புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக கல்வித் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவந்தனர்.

விசாரணையில், சொக்கணப்பள்ளி, குரும்பட்டி, மிட்டப்பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1999ஆம் ஆண்டுமுதல் ராஜேந்திரன் ஆசிரியராகப் பணியாற்றிவருவதும், அவர் பணியில் சேர அளித்துள்ள சான்றிதழ்களில் முரண்பாடு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இது குறித்து காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

இதையும் படிங்க:பட்டறை தொழிலாளி தற்கொலை விவகாரம் - குற்றவாளியை கைது செய்யக்கோரி விஸ்வகர்மா மக்கள் கட்சியினர் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details