தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமாரசாமிபேட்டை மயானக் கொள்ளையில் வேண்டுதலுக்காக அந்தரத்தில் தொங்கிய பக்தர்கள் - mayana kollai kumarasamypettai

தருமபுரி: குமாரசாமிபேட்டை மகா சிவராத்திரியையொட்டி அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

dharmapuri
dharmapuri

By

Published : Feb 24, 2020, 11:11 AM IST

தருமபுரி மாவட்டம், குமாரசுவாமிபேட்டையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் ஏராளமான பக்தா்கள் அலங்குகள் குத்தியும், காளி வேடமிட்டும், ஊா்வலமாக வந்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

தொடா்ந்து, திருத்தோ் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன் ஊா்வலமானது, தருமபுரி குமாரசுவாமிபேட்டை முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சுடுகாடு பகுதிக்கு வந்தது.

அங்காளம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா

விழாவில் பக்தா்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கிய நிலையில், தேரில் வந்த அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. மயானக் கொள்ளை நிகழ்ச்சிக்காக ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வருகை புரிந்திருந்தனர்.

இதையும் படிங்க:'திருமணம் ஆக சாட்டையடி' - திருப்பத்தூர் அருகே விநோத வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details