தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரஷர் உரிமையாளர்கள் உண்ணாவிரதம் வாபஸ் - கொரட்டகிரி

ஒசூர் அடுத்த கொரட்டகிரி கிராமத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி கிரஷர் உரிமையாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கிரஷர் உரிமையாளர்கள் உண்ணாவிரதம் வாபஸ்!
கிரஷர் உரிமையாளர்கள் உண்ணாவிரதம் வாபஸ்!

By

Published : Jan 4, 2023, 8:35 AM IST

கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த கொரட்டகிரி கிராமத்தில் உள்ள 7 கல்குவாரிகளின் வாகனங்கள் ஊருக்குள் வர அனுமதி அளித்த உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் என 2,000 பேர் நேற்று (ஜன.3) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒசூர் அடுத்த கொரட்டகிரி கிராமத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி கிரஷர் உரிமையாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

அப்போது அவர்கள், இதற்கான அனுமதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் எனவும் அறிவித்தனர். இந்த நிலையில் குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உடனான சமாதான பேச்சுவார்த்தை கூட்டம், ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பாணு ரெட்டி, மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் மற்றும் ஒசூர் சார் ஆட்சியர் சரண்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி குவாரி வாகனங்கள் செல்லக் கூடிய சாலைகளை சரிசெய்து நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த உறுதியை ஏற்ற கிரஷர் உரிமையாளர்கள், காலவரையற்ற உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் இருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். மேலும் ‘இன்னும் ஓரிரு நாட்களில் கொரட்டகிரி கிராமம் வழியாக, 7 கல்குவாரி கனரக வாகனங்களும் செல்லும்’ என குவாரிகள் சங்க தலைவர் சம்பங்கி தெரிவித்தார்.

இதையும் படிங்க:கிருஷ்ணகிரியில் கிரஷர் உரிமையாளர்கள் உண்ணாவிரதம்!

ABOUT THE AUTHOR

...view details