தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி தலைமை மருத்துவக் கல்லூரி - மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பரிசோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் நேற்று (ஜூன் 24) செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆய்வுக்கூடம் 2ஆவது ஆய்வுக்கூடம் ஆகும். ஏற்கெனவே, ஓசூரில் ஐ.வி.சி.இசட் கல்வி நிறுவனத்தில் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டு
செயல்பாட்டில் உள்ளது.
பி.சி.ஆர் ஆய்வகம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் - கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை
கிருஷ்ணகிரி: தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பரிசோதனை செய்வதற்கான ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
ஆய்வகம்
இதன்மூலம் பொதுமக்கள் பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக அமையும். ஆகவே, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள ஆய்வகங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.