கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் முரளி இன்று (டிச.30) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 31ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. தனியார் தங்கும் விடுதிகள், ரிசார்ட் போன்றவை தீவிரமாக கண்காணிக்கப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு ஓசூர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும். இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று சாகசம் செய்து, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்" என்றார்.
இதையும் படிங்க: புத்தாண்டு பரிசு அறிவித்த முதலமைச்சர்! மகிழ்ச்சி கடலில் அரசு ஊழியர்கள்!