கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது மகள் பூஜா ஸ்ரீ (வயது 17). தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி பூஜா ஸ்ரீ உடற்சோற்வு மற்றும் காய்சல் காரணமாக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதையடுத்து நேற்று (செப். 29) காலை 10.30 மணியளவில் சிறுமிக்கு பரிசோதனைகள் மேற்கொண்ட மருத்துவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது. பின்னர் மாலை 4.30 மணியளவில் திடீரென இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு நீர் நிரம்பி உள்ளதாகவும், கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து வெண்டிலேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் மூலம் ஒசூர் காவேரி மருத்துவமனைக்கு சிறுமி அழைத்து செல்லப்பட்டு உள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் நள்ளிரவு முதல் சிறுமிக்கு சிகிச்சை அளித்தும், பிரச்சினைகளை முன்கூட்டியே கூறாமால் 15 மணிநேர சிகிச்சைக்கு பிறகு தான் பிரச்சினைகளை கண்டறிய முடிந்ததா?, எனக் கூறி சிறுமியின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஒசூர் நகர போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பெற்றோரிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இது குறித்து அவரது பெற்றோர்கள் கூறியதாவது, "பூஜாவிற்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த செப்டம்பர் 28 தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம்.