தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2ஆம் போக பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் உத்தரவு - இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி: நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில், 120 நாள்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

Krishnagiri
water for second irrigation

By

Published : Dec 11, 2020, 2:04 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில், வரும் 14.12.2020 முதல் 12.04.2021 வரை மொத்தம் 120 நாள்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்கு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.

இதனால் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள ஒன்பதாயிரத்து 12 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், வேளாண் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details