கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் உள்ள அரசம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே கோழிப்பண்ணை நடத்தி வருபவர் ஸ்ரீதரன் (வயது 25), இது அவரின் வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐந்து ஆயிரம் கோழி குஞ்சுகளை பண்ணைக்கு இறக்குமதி செய்துள்ளார். இவைகளுக்கு வெப்பம் வேண்டும் என்பதற்காக பண்ணை முழுவதும் மின் விளக்குகள் பெருத்தபட்டு, எரிந்து வந்த நிலையில் திடீரென நேற்று இரவு கோழிப்பண்ணையில் தீ பிடித்தது.
இதை அறிந்த ஸ்ரீதரன் போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கு பாரூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் 4 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு 1 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து பாரூர் காவல்துறையினர் விசாரணை செய்ததில் மின்ஒயர்களில் ஏற்பட்ட மின் கசிவினால் கோழி தீவன மூட்டைகளில் தீ ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: 'நாகையில் மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்' - தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!