தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிப்பு! - கரோனா வைரஸ்

கிருஷ்ணகிரி: பெரியமுத்தூர் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், ஊராட்சி மன்றம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கிருமி நாசினி தெளித்த ஊராட்சி நிர்வாகம்
கிருமி நாசினி தெளித்த ஊராட்சி நிர்வாகம்

By

Published : Apr 8, 2020, 3:53 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது. அதன்படி பெரியமுத்தூர் ஊராட்சியில் உள்ள நாகராஜபுரம், கிருஷ்ணகிரி அணை, துவரகாபுரி ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், வாரத்திற்கு ஒரு முறை அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணியினை ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஊராட்சி செயலர் சிவமணி, துணை தலைவர் ராஜசேகர், 10ஆவது வார்டு உறுப்பினர் சதீஷ்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கிருமி நாசினி தெளித்த ஊராட்சி நிர்வாகம்

பின்னர், ஊராட்சியில் தொடர்ந்து சிறப்பாக கள பணியாற்றும் தூய்மை காவலர்கள் 10 நபர்களுக்கு உணவு பொருள்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவை மதிக்காத வாகன ஓட்டிகள்: தோப்புக்கரணம் போட வைத்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details