தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரயில் பாதை - அமமுக வேட்பாளர் - ரயில் பாதை

கிருஷ்ணகிரி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மாவட்ட மக்களின் நீண்ட கோரிக்கையான ரயில் பாதை அமைக்கும் கோரிக்கை உறுதியாக நிறைவேற்றப்படும் என்று அமமுக வேட்பாளர் கணேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அமமுக வேட்பாளர்

By

Published : Mar 27, 2019, 12:05 PM IST

கிருஷ்ணகிரி அமமுக வேட்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கிருஷ்ணகிரியில் முக்கிய பிரச்னையாக உள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலை திட்டம் நிறைவேற்றப்படும். குறைந்தபட்சம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அத்தகைய செயல் திட்டம் தீட்டி நடைமுறைப்படுத்தப்படும் என்றார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகமாக மலர் சாகுபடி நடப்பதால் கிருஷ்ணகிரி தலைமை இடத்திலேயே மலர் மகத்துவ மையம் அமைத்து சந்தைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை பழுதாகி உள்ளது சாலையை திறம்பட நாங்கள் செயல்பட்டு புதிய சாலை நல்ல நிலைமையில் அமைத்து கொடுப்போம் என்றார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மாவட்ட மக்களின் நீண்ட கோரிக்கையான ரயில் பாதை அமைக்கும் கோரிக்கை உறுதியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

அமமுக வேட்பாளர்

பலமுனை போட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எவ்வாறு வெற்றிபெறும் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்கள் புதுமையான உத்தி வைத்துள்ளோம் அதனை தேர்தல் பிரச்சாரத்தில் கடைபிடிப்போம். உண்மை எங்கள் பக்கம் உள்ளது. மக்கள் எங்களுக்கு வாக்களிப்பர். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details