கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, பேரிகை, அத்திமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஒருசில கிராமங்களில் ஆலங்கட்டிமழை பெய்தது.
கோடையில் பெய்த கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி! - விவசாயிகள்
கிருஷ்ணகிரி: ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சூறைக்காற்றுடன் கூடிய கனமழை
பகல் நேரத்தில் வெயில் அதிகரித்தும், மாலை நேரத்தில் கனமழை பெய்தும் வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சி நிலவுகிறது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஓசூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.