தமிழ்நாடு எல்லையான ஓசூர் ஜூஜூவாடிக்கு வந்த யுவராஜ் என்ற இளைஞர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர். இவர் திருச்சியை சேர்ந்த புரோக்கர் ஒருவர் முலமாக வடமாநிலத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். நல்ல சம்பளம் உள்பட பல வாக்குறுதிகளை நம்பி சென்றவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே கக்கோதா கிராமத்தில் உள்ள தாபாவில் (திறந்தவெளி மது விடுதியுடன் கூடிய உணவகம்) வேலைக்கு சேர்ந்தார்.
வேலைக்குச் சேர்ந்த சில நாள்களில் தனது சொந்த ஊருக்கு திரும்ப நினைத்த இளைஞரை அனுப்ப மறுத்துவிட்டார் தாபா உரிமையாளர். அது மட்டுமில்லாமல் அவரை அடித்து துன்புறுத்தியதோடு தப்பிவிடக் கூடாது என்பதால் தனி அறையில் வைத்து பூட்டியுள்ளார். கரோனா காரணமாக தாபா மூடப்பட்டது. உரிமையாளர் இல்லாததை தனக்கு சாதகமாக்கி கொண்டு மீண்டுவர முயற்சி செய்துள்ளார் யுவராஜ்.