கிருஷ்ணகிரி ரயில்வே காலனியை சேர்ந்தவர் அன்பரசன். விளையாட்டு வீரரான இவர், கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். சேலத்தில் பணியாற்றி வந்த அன்பரசன், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணி மாறுதல் பெற்று கிருஷ்ணகிரி வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு துப்பாக்கி ஏந்திய காவலராக பணியாற்றி வந்தார்.
நீதிமன்ற வளாகத்தில் சடலாமாக மீட்கப்பட்ட காவலர்! - நீதிமன்ற வளாகத்தில் சடலாமாக மீட்கப்பட்ட காவலர்
கிருஷ்ணகிரி: மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்தில் துப்பாகியால் சுடப்பட்ட நிலையில் காவலர் உடல் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
A policeman found shot dead in the Krishnagiri District Integrated Court Complex building
இந்நிலையில், இன்று காலை வீட்டிற்கு வராததால் அன்பரசனை தேடியபோது, நீதிமன்றத்தின் முதல் தளத்தின் படியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். முதல்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் குடும்பத்தில் தகராறு இருந்து வந்தது தெரியவந்துள்ளது.