கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மூக்கா கவுண்டனூர் கிராமத்தில் வசித்துவருபவர் பெருமாள். இவர் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்தார்.
ஊரடங்கில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், மளிகைப் பொருள்களுடன் சேர்த்து பெருமாள், கள்ளச்சாராயமும் விற்றுவந்துள்ளார்.
இதனால், அவரது கடையில் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. இதனையறிந்த சிலர் மத்தூர் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கடையை ஆய்வு செய்தனர்.
கள்ளச்சாராயம் விற்ற நபரை கைது செய்த காவல் துறையினர் ஆய்வில் கடையில் பதுக்கி வைத்திருந்த ஒன்பது லிட்டர் கள்ளச்சாராயத்தை கண்டறிந்தனர். இதையடுத்து பெருமாளை கைது செய்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: யூ-டியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய பாய்ஸ்...!