கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் இன்று (அக.21) வெறிநாய் ஒன்று புகுந்தது. பின்னர் அந்த நாய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரட்டி விரட்டி கடித்தது.
சிறிது நேரத்தில் அங்கிருந்து எங்கோ ஓடி ஒளிந்து மாயமாகிவிட்டது. இந்நிலையில், அந்த நாயை பிடிக்க கிராம மக்கள் அனைத்து இடங்களிலும் தேடினர். இருப்பினும் எங்கும் கிடைக்கவில்லை.
இதையடுத்து வெறிநாய் கடித்த குழந்தைகள் உள்பட 80 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர்.