கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமையவுள்ளது. சுமார் 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கான பணியை முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.
இந்த விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 18.46 கோடி மதிப்பீட்டில் நான்கு புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
மருத்துவக் கல்லூரிக்கான மேப் இத்தகைய பணிகளால் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழை மக்களின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 15 ஆண்டு கனவு நிறைவேறுகிறது. புதிதாக அமையவிருக்கும் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி கிருஷ்ணகிரி தலைமையிடத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முதலமைச்சர் வருகையையொட்டி 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளைத் திறக்க அனுமதி கோரி பேரணி