கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில், அதிகாலை 4 மணி முதல் கிருஷ்ணராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையில், கணக்கில் வராத 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் சோதனை: 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பறிமுதல்! - Hosur Jujuvadi Check Post
கிருஷ்ணகிரி: ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
hosur
இச்சோதனைச்சாவடியில், வெளிமாநிலத்திலிருந்து அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை இங்குள்ள பணியாளர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பதால் அதிகளவு விபத்து நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கடந்த 12ஆம் தேதி ஓசூர் பகுதியில் உள்ள மற்றொரு சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.