கிருஷ்ணகிரியில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார், ஆய்வாளர் கோபி, உதவி ஆய்வாளர்கள் சிவசாமி, ரகுநாத், மாதேஸ்வரன், திருநாவுக்கரசு, உள்ளிட்ட காவலர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஈரோட்டிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கர்நாடக பதிவு எண் கொண்ட லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் தமிழ்நாடு அரசன் விலையில்லாத 17 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, அவை பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து லாரியை ஓட்டி வந்தவர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த அஜித். அவரை கைது செய்த தடுப்பு பிரிவு காவல் துறையினர் கடத்தி வரப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான 17 டன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர்.