கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கும்பளம் வனப்பகுதியில் 15க்கும் மேற்ப்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. நேற்றிரவு கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த காட்டுயானை கூட்டம் கரியானப்பள்ளி, காருபல்லா வழியாக சென்று சின்னகுத்தி கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் தக்காளி, வாழை தோட்டங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.
வாழை, தக்காளி தோட்டங்களை சூறையாடிய 15 காட்டுயானைகள் - 15 wild elephants looting banana and tomato plantations
கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே கும்பளம் வனப்பகுதியில் சுமார் 15 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால், அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தோட்டத்திற்குள் காட்டுயானைகள் - கிராமங்களுக்கு எச்சரிக்கை
யானைகள் தற்போது கும்பளம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் காருபல்லா, அலேகுந்தானி, கடத்தூர், அலுசோனை, சின்னகுத்தி உள்ளிட்ட 10க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள்ங, ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்வதைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு வன துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்