கரூர்செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 80), என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவையில் இருந்து அவரது பேரன் ராஜேஷ் கிரீம் (32) வந்து கலந்து கொண்டார். ராஜேஷ் கிரீம் அவரது தாத்தாவிற்கு இன்று ஐந்தாவது நாள், ஈமச் சடங்கு செய்வதற்காக காவிரி ஆற்றில் இறங்கிய போது, மணல் குழியில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் நீரில் மூழ்கிய அவரை அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டுனர். ஆனால், அதற்குள் நீரில் மூச்சுத்திணறி ராஜேஷ் கிரீம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ராஜேஷ் கிரீம் உடலை மீட்டு அவசர ஊர்தி மூலம் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வாங்கல் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.