கரூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குடிநீர் பிரச்னை குறித்து புகாரளிக்க புதிய எண்கள் அறிவிப்பு
கரூர்: குடிநீர் பிரச்னை தொடர்பாக புகார் தெரிவிக்க கரூர் மாவட்ட ஆட்சியர், பிரத்யேக எண்களை அறிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், “கரூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பற்றாக்குறை, குடிநீர் தொடர்பான புகார்களுக்கு இலவச வாட்ஸ்அப் எண் 18004255104 மற்றும் லேண்ட் லைன் எண் 04324-255104 எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கலாம். கரூர் மாவட்டத்தில் வீடுகளில் தண்ணீர் எடுப்பவர்களுக்கு மாற்று வழியாக வீடுகளில் flow control எனப்படும் குடிநீர் குழாய் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடைக்கோடி மக்களுக்கும் முறையாக ஒரே விகிதத்தில் தண்ணீர் வழங்கப்படும். மேலும் பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூர், தோகமலை போன்ற பகுதிகளில் 342 குக்கிராமங்களுக்கு 56 லாரிகள் விகிதம் சுழற்சி முறையில் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது” என்றார்.