கரூர் மாவட்டம் பிச்சம்பட்டி கிராமத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள அரசுக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் தண்ணீர் பாரபட்சமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
தண்ணீர் தருவதில் பாகுபாடு! அதிமுக பிரமுகர் மீது புகார்!
கரூர்: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் அதிமுக பிரமுகரை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இதனால் பெரும் இன்னலுக்குள்ளான மக்கள் காலி குடத்துடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து பேசிய கிராமவாசி ஒருவர், "அதிமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரும் அவரது கூட்டாளிகளும் இணைந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். தாந்தோணி ஒன்றிய அலுவலர் சிவகாமி, பஞ்சாயத்து தலைவர் அபிராமி உள்பட பலர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.
இந்த மனுவில் தண்ணீர் தர மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். கரோனா தொற்று பரவல் காரணமாக, மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக ஒப்படைக்காமல் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த பெட்டியில் வைத்தனர்.