கரூர் 80 அடி சாலையில் உள்ள தனியார் இடத்தில் அனைத்து வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கார்வேந்தன், வ.உ.சி பேரவைத்தலைவர் மகேஸ்வரன், தமிழ் தேசிய கட்சி மாவட்டச் செயலாளர் தமிழ்சேரன், தீரன் சின்னமலை கொங்கு பேரவை ஆனந்த் உள்ளிட்ட 10 பேர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வேளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கார்வேந்தன், "வேளாளர் அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.