தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளாளர் தனி மதம் என அறிவிக்கக்கோரி ட்விட்டர் ஹேஷ்டேக் - central government

ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக அதிகம் பேசப்படும் பொருளாக வெள்ளாளர் தனி மதம் ஹேஸ்டேக் மாறியுள்ளது.

வெள்ளாளர் தனி மதம் என அறிவிக்கக்கோரி ட்விட்டர் ஹேஷ்டேக்
வெள்ளாளர் தனி மதம் என அறிவிக்கக்கோரி ட்விட்டர் ஹேஷ்டேக்

By

Published : Jun 12, 2021, 7:42 PM IST

இதுகுறித்து அந்த சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் கார்வேந்தன் ஈடிவி பாரத்திற்குப் பிரத்யேக பேட்டிளித்தார். அதில் " கடந்த நான்கு ஆண்டுகளாக வெள்ளாளர் என்ற பெயரை தேவேந்திர் சமூகத்திற்கு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல கட்ட போராட்டங்களை நடத்தி எதிர்ப்பினை பதிவு செய்தோம். ஆடிட்டர் குருமூர்த்தி, ஆர்எஸ்எஸ், பாஜகவைத் சேர்ந்தவர்களால் எங்கள் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்து தேவேந்திரகுல வெள்ளாளர் என்ற அரசாணையை வெளியிட்டுள்ளது.

#வெள்ளாளர் தனி மதம் - ட்விட்டர் டிரெண்டிங்
அதிமுக தலைமையிலான முந்தைய தமிழ்நாடு அரசு மோடி அரசின் நிர்ப்பந்தத்தால் அடிபணிந்து எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவையும், பாரதிய ஜனதா கட்சியையும் தமிழ்நாட்டிலுள்ள வெள்ளாளர் சமூகத்தினர் புறக்கணித்து படுதோல்வி அடைய செய்தார்கள்.

தொடர்ந்து வெள்ளாளர் சமூகத்தை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய அரசுக்கு, தற்பொழுது அமைந்துள்ள புதிய தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் இந்து மதத்தைவிட்டு வெளியேறி சைவ வெள்ளாளர் தனி மதம் என அறிவிக்க வேண்டும் என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வேளாளர் சங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கார்வேந்தன் பேட்டி
ஆரிய பார்ப்பனர்கள் இந்துமதத்தை தமிழ் சமூகங்கள் ஏற்க வேண்டுமென காலங்காலமாக வற்புறுத்தி வருவதை எதிர்த்து தொடங்கப்பட்ட திராவிட இயக்கங்களில் முக்கிய பொறுப்பு வகித்தவர்கள் வெள்ளாளர்களே. பின்னாளில் நாடக நடிகர்கள், சினிமா பிரபலங்கள் அரசியலில் நுழைந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்ததால் பார்ப்பன எதிர்ப்பு கைவிடப்பட்டது.இதன் காரணமாக தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் தூண்டுதலை முறியடிக்கும் விதமாக இனி மாவட்டந்தோறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பார்ப்பன எதிர்ப்பை தீவரப்படுத்தயுள்ளோம். இதற்காக தந்தை பெரியாரால் துவங்கப்பட்ட திராவிட கழகம் பார்ப்பன எதிர்ப்பை கைவிட்டாலும், நாங்கள் பின்வாங்கப் போவதில்லை தீவிர பார்ப்பன எதிர்ப்பை முன்னெடுக்கவுள்ளோம்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அர்ச்சகராக விருப்பமுள்ள பெண்களுக்கு பயிற்சி - அமைச்சர் சேகர் பாபு

ABOUT THE AUTHOR

...view details