தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக சிறுநீரக தினம்: 'கரூர் டூ ஈரோடு' விழிப்புணர்வு பேரணி

கரூர்: உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கரூரிலிருந்து ஈரோடு வரை சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூர் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கரூர் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

By

Published : Mar 11, 2021, 5:47 PM IST

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கரூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, நடைபெற்றது. கரூர் அபிராமி மருத்துவமனை, அபிராமி கிட்னி கேர், இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய இந்த பேரணி கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் தொடங்கி ஈரோடு வரை சுமார் 70 கி.மீ. நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்கத்தின் கரூர் கிளை தலைவர் மருத்துவர் சதீஷ் தலைமையில், ரோட்டரி கிளப் ஆஃப் டெக்ஸிடி முன்னாள் தலைவர் சூரியநாராயணா இந்நிகழ்ச்சியை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் சிட்டி கரூர் தலைவர் தினேஷ், தமிழ்நாடு போக்குவரத்து வார்டன் கரூர் மண்டல தலைவர் தீபம் சங்கர், அபிராமி மருத்துவமனை மருத்துவர் மனோகர், இந்திய மருத்துவ சங்க செயலாளர் மருத்துவர் சீனிவாசன், வித்யா மந்தீர் கல்வி குழும தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:'சிறுநீரக செயலிழப்பு சப்தமின்றி கொல்லும் நோய்' - மருத்துவர்கள் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details