கரூர்: கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள வேலாயுதம்பாளையம் நானப்பரப்பு நான்கு ரோடு பகுதியில் கார்த்தி என்பவர் இருசக்கர வாகனத்தில் வேலாயுதம்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
நானப்பரப்பு பிரிவு அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற கார்த்தியின் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. அத்துடன் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் சென்று கொண்டிருந்த மேலும் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேலாயுதம்பாளையம் காந்திநகர் 11ஆவது வீதியைச் சேர்ந்த கோபால் (33), அவரது நண்பர் காந்திநகரை சேர்ந்த முருகேசன் ஆகியோர் படுகாயமடைந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கார்த்தி (32) கோபால் (33), இருவரும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லும்போது உயிரிழந்தனர்.
கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுகாயமடைந்த முருகேசன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?