தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளம் தூர்வாரும் பணி எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு! - குளம் தூர்வாரும் பணி

கரூர்: நான்கு லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணியை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

transport minister visit new lake project

By

Published : Nov 21, 2019, 10:54 PM IST

கரூர் மாவட்டம் கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெங்கல் பட்டி என்னும் இடத்தில் சிறிய அளவிலான குளம் தூர்வாரப்படாமல் இருந்ததுள்ளது. இந்த குளத்தை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, ரூபாய் 4 லட்சம் மதிப்பீட்டில் இந்த குளம் தூர்வாரப்பட்டது. இதனை, கரூர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஏர்த் மூவர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செய்தன. இன்று மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணியை தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

குளம் தூர்வாரும் பணி: போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஜல்சக்தி அமைப்பின் நிதி அலுவலர் உஷா உடனிருந்தார்.
இதுகுறித்து பேசிய போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 484 குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details