தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மா பூங்காவைத் திறந்து வைத்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் - அம்மா பூங்காவை திறந்து வைத்த அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்

கரூர்: அம்மா பூங்காவைத் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

transport minister open amma park
transport minister open amma park

By

Published : Feb 13, 2020, 10:49 PM IST

கரூர் மாவட்டம், வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் சுமார் 60 லட்சம் மதிப்புள்ள அம்மா பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூங்காவைத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

இந்தப் பூங்காவில் மக்கள் பயன்பாட்டிற்காக ஆடவருக்கான உடற்பயிற்சிக் கூடம், நடைப்பயிற்சி செல்வதற்கான சிறப்பு சாலை, அமர்வதற்கு தேவையான இருக்கைகள், குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டுப் பூங்கா போன்றவை இடம் பெற்றன.

அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அவருடன் திட்ட அலுவலர் கவிதா, அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details