கரூர்: அம்மா உணவகத்தில் உணவு உண்டு ஒரு லட்சம் ரூபாய் நிதியளித்தார் தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கரூர் நகரில் வெளி மாநிலத்தவர்கள், சாலையில் உணவின்றி சிரமப்படுபவர்கள், ஆதரவற்றோர்களுக்கு கரூர் உழவர் சந்தை, அரசு மருத்துவமனை வளாகம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டது.
முதலமைச்சருக்காக காக்க வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்; நடந்தது என்ன?
இதனையடுத்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நகராட்சி ஆணையரிடம் முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 24ஆம் தேதி முதல் காலை டிபன், மதியம் கலவை சாதம், மாலையில் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு அப்போது அங்கு சமூக இடைவெளி விட்டு நின்ற பொதுமக்களுக்கு உணவினை வழங்கி, தானும் ருசித்து ஆய்வு மேற்கொண்டார். உழவர் சந்தை பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் நாள் ஒன்றுக்கு மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்படுவதாக நகராட்சி ஆணையர் சுதா தெரிவித்தார்.