தானியங்களின் அரசி என்று உழவர்களால் அழைக்கப்படும் மக்காச்சோளம் ஆடி மாத மழையின் வரவை எதிர்பார்த்தே விதைக்கப்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் மட்டுமே விதைக்கப்படும் மக்காச்சோள பயிர்களில் அண்மைக்காலமாகவே ஆப்ரிகன் பட்டைப்புழு என்கிற புழு தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் இந்த பட்டைப்புழு தாக்குதலின் அறிகுறிகள் குறித்தும், அதனை கட்டுப்படுத்த விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு மாவட்டங்களில் வேளாண்மை துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது.