கரூர் நகராட்சி வடக்கு காசிம் தெரு, அன்சாரி தெருவில் சுமார் 200 வீடுகள் அமைந்துள்ளன. இங்குள்ள மக்களுக்கு ஆறு மாதம் குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதால் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வந்துள்ளன.
இது குறித்து பலமுறை கோரிக்கை அளித்தும், நகராட்சி நிர்வாகம் கரோனா தடுப்பு பணி, தேர்தல் பணி எனக் காலதாமதப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கரூர் நகராட்சி ஆணையரை நேற்று (ஏப்.8) தேதி மாலை அப்பகுதி மக்கள் கழிவுநீர், புலுக்கல் கலந்த குடிநீருடன் சென்று முறையிட்டு புகார் அளித்தனர்.
அப்போது பொது மக்களிடம் உடனடியாக குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாக உறுதியளித்தார். சம்பந்தப்பட்ட பகுதிக்கு அலுவலர்களை அனுப்பி ஜேசிபி இயந்திரம் மூலம் கழிவுநீர் குடிநீர் குழாய்களைச் சரி செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து இரவு பகலாக நடைபெற்ற இந்த பணி நிறைவு பெற்று இன்று (ஏப்.9) நிறைவடைந்தது.
தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு இன்று (ஏப்.9) வருகை தந்த நகராட்சி ஆணையாளர், பொது மக்களின் வீட்டுக்குச் சென்றார். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த கரூர் நகராட்சி ஆணையருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க:அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு எம்.பி. ஜோதிமணி கடிதம்