தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பைக் வாங்க வைத்திருந்த பணம்: கரோனா நிதிக்கு வழங்கிய மாணவன்!

இருசக்கர வாகனம் வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கரோனா நிதியாக வழங்கிய 11ஆம் வகுப்பு மாணவனுக்கு, விரைவில் இருச்சகர வாகனம் வாங்கித் தருவேன் என அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.

கரூரில் கரோனா நிதி வழங்கிய 11ஆம் வகுப்பு மாணவன்
கரூரில் கரோனா நிதி வழங்கிய 11ஆம் வகுப்பு மாணவன்

By

Published : May 16, 2021, 7:36 AM IST

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று, கரோனா நிவாரண நிதிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக கரோனா நிவாரண நிதி வழங்குவதில் பள்ளி மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். அண்மையில் மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் தான் சைக்கிள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். அதே போல விழுப்புரம் மாவட்டத்திலும் 5ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மடிக்கணினி வாங்க, தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1,500 ரூபாயை முதலமைச்சரின் கரோனா நிதிக்கு வழங்கினார்.

இதன் வரிசையில் கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோடங்கிபட்டி கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் மகன் ஆர்.ஜோதீஸ்வரன். இவர் கோடங்கிபட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரேயிடம் கரோனா நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார். 11ஆம் வகுப்பு மாணவனான இவர் இந்த பணத்தை இருசக்கர வாகனம் வாங்குவதற்காக சேர்த்து வைத்துள்ளார்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அம்மாணவனின் செயலைப் பாராட்டியதுடன் நமக்கு நாமே உதவிக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளும் வகையில் சிறுவனை செயல் அனைவருக்கும் முன்னுதாரணம் என்று கூறினார். அம்மாணவனின் செயலை ஊக்குவிக்கும் வகையில் தனது சொந்த செலவில் ஓட்டுநர் உரிமைத்துடன் மாணவன் விரும்பிய வாகனத்தை வாங்கி தர இருப்பதாக மேடையில் அறிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details