கரூர் மாவட்ட புதிய ஆட்சியராகப் பிரபுசங்கர் நேற்று (ஜுன் 16 ) பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பாதுகாப்பு உடை அணிந்து சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
கரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும், ஆக்ஸிஜன் இருப்பு குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் எம். லியாகத், கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் மருத்துவர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குனர் மருத்துவர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆட்சியர் பிரபுசங்கர் மருத்துவர் என்ற அடிப்படையில் பாதுகாப்பான முறையில் நோயாளிகளைச் சந்தித்தார். ஆட்சியர் ஒருவர் கரோனா வார்டில் நேரடியாக ஆய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறை?