தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் பரப்புரையை நிறுத்துவிட்டு அவசர ஊர்திக்கு வழிவிட்ட முதலமைச்சர் - முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை

கரூர்: முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, தனது பேச்சை நிறுத்திவிட்டு அவ்வழியே சென்ற அவசர ஊர்திக்கு பொதுமக்களை வழி விடும்படி கேட்டுக்கொண்டு, வாகனம் சென்ற பின்னர் மீண்டும் பரப்புரை மேற்கொண்டார்.

கரூரில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில்
கரூரில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில்

By

Published : Mar 25, 2021, 1:19 PM IST

கரூர் பரமத்தியில் மார்ச்.24ஆம் தேதி தேர்தல் பரப்புரையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார். அவர் விழா மேடைக்கு வருகைதந்தபோது கரூர்-கோவை சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி இருவரும் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி, பரப்புரை மேடை அருகே வாகனத்தை நிறுத்தி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பேச்சை நிறுத்திவிட்டு, பொதுமக்களை வழி விடும்படி கேட்டுக்கொண்ட முதலமைச்சர்

அப்போது கரூரிலிருந்து கோவை நோக்கி நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு அவசர ஊர்தி ஒன்று முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த மேடை அருகே வந்தது. முதலமைச்சர் மேடையைச் சுற்றி ஏராளமான பொதுமக்கள் சாலை முழுவதும் கூடியிருந்த நிலையில், முதலமைச்சர் பழனிசாமி தனது பேச்சை நிறுத்திவிட்டு, அங்குவந்த அவசர ஊர்திக்குபொதுமக்களை வழி விடும்படி கேட்டுக்கொண்டார். பொதுமக்களும் உடனடியாக வழிவிட்டு அவசர ஊர்தியை கோவை நோக்கி விரைந்து செல்ல உதவினர்.


அதனைத் தொடர்ந்து தனது பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர், நாம் திமுகவினரைப் போல பொதுமக்களுக்கு இடையூறுகள் செய்யமாட்டோம்” என சுட்டிக்காட்டி பரப்புரையை முடித்தார்.

இதையும் படிங்க: 'முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை'

ABOUT THE AUTHOR

...view details