மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுகிறார். சமீபத்தில் அமமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்திருக்கும் செந்தில் பாலாஜி கரூரில் எப்படியாவது திமுக கூட்டணி வேட்பாளரை வெல்லவைத்து அறிவாலயத்தின் குட் புக்கில் வலுவாக இடம்பெற வேண்டுமென நினைப்பதாகவும், தம்பிதுரையை வெல்லவிடவே கூடாது என்பதில் தீர்க்கமாக பணிகளை தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
எனவே செந்தில் பாலாஜியின் வியூகங்களை தம்பிதுரை தாக்குப்பிடிக்க வேண்டும் எனவும், கரூரில் தம்பிதுரைக்கு உண்மையான சவால் காத்திருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு தனியார் விடுதியில் கூட்டணி கட்சியினருடன் தம்பிதுரை ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து முக்கியமாக செந்தில் பாலாஜியின் வியூகங்களை சமாளிப்பது குறித்து ஆலோசனை செய்ததாக தெரிகிறது. இன்று பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து தம்பிதுரை பாமக மற்றும் தேமுதிகவினரையும் சந்திக்க இருக்கிறார்.
இதற்கிடையேஇன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்பொழுது தனித்து போட்டியிட்டார்கள் இப்போது இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாபெரும் கூட்டணி அமைத்துள்ளது” என்றார்