தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் காப்பீடு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்

கரூர்: தொழில்பேட்டை பகுதியிலுள்ள தமிழ்நாடு அரசு மதுபான சேமிப்பு கிடங்கின் முன்பு, ரூ.50 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு மதுபான கடை பணியாளர்கள் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TASMAC employees striving for medical insurance
TASMAC employees striving for medical insurance

By

Published : Jul 1, 2020, 5:33 AM IST

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கரூர் மாவட்டம், தொழில்பேட்டை பகுதியிலுள்ள அரசு மதுபான கிடங்கின் முன் தமிழ்நாடு அரசு மதுபான ஊழியர்கள், மருத்துவக் காப்பீடு வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மதுபான ஊழியர்கள் சங்க தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். இப்போராட்டத்தில் கடைநிலை பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

மேலும், மதுபான கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட மேலாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் பெருமளவில் ஆதாயம் அடைவதாகவும், இது குறித்த ஆதாரங்களைக் கொடுத்தும், அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details