தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 6, 2020, 3:40 PM IST

ETV Bharat / state

இரண்டு பேரால்தான் வேல் யாத்திரைக்கு தடை: தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர்

கரூர்: சமூக ஆர்வலர்கள் இரண்டு பேரால்தான் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

சமூக ஆர்வலர்கள் 2 பேரால் தான் வேல் யாத்திரைக்கு தடை என பேட்டி
சமூக ஆர்வலர்கள் 2 பேரால் தான் வேல் யாத்திரைக்கு தடை என பேட்டி

கரூர் மாவட்ட பாஜக பிரசார பிரிவு சார்பில் தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பிரசார பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். பாஜக மாவட்ட தலைவர் சிவசாமி, தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், "கரூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பாஜக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்போம். வேல் யாத்திரையை தடை செய்யக்கோரி இரண்டு சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில்தான் நீதிமன்றம் அரசிடம் கருத்து கேட்டிருக்கிறது.

சமூக ஆர்வலர்கள் 2 பேரால் தான் வேல் யாத்திரைக்கு தடை என பேட்டி

அதற்கு அரசும் ஒப்புதல் அளித்திருப்பது வேதனை அளிக்கிறது. வேல் யாத்திரை தடைக்கு காரணம் இரண்டு சமூக ஆர்வலர்கள்தான்" என்றார்.

இதையும் படிங்க: முருகன் கையில் இருக்கும் வேல், பாஜக கைக்கு சென்றால்...

ABOUT THE AUTHOR

...view details