தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் நிலைய செயல்பாடுகள் குறித்து கற்றுக்கொள்ளும் மாணவர்கள்! - ரயில் நிலையம் குறித்து தெரிந்து கொண்ட மாணவ மாணவியர்

கரூர்: பள்ளிப் பரிமாற்ற திட்டத்தின் கீழ், கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் நகர்ப்புற பள்ளிக்குச் சென்று பல்வேறு செயல்களை கற்று வருகின்றனர்.

students
students

By

Published : Jan 22, 2020, 7:48 AM IST

கரூர் மாவட்டத்தில் வெ.பசுபதிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு நகராட்சி அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் 6,7, 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பரிமாற்ற கல்வித் திட்டத்தின் கீழ் மற்றொரு பள்ளிக்குச் சென்று பாடங்களை கற்று வருகின்றனர்.

அந்த வகையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாடங்கள் கற்று வந்தனர். அதன் ஒரு பகுதியாக கரூர் ரயில் நிலையத்தில் அன்றாட செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக இரு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ரயில் நிலைய முன்பதிவு, ரயில் வருகை அறிவிப்பு, ரயில் தாமத நிலை அறிவிப்பு, ரயில் நிலைய பராமரிப்பு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

ரயில் நிலைய செயல் குறித்து விளக்கும் ஆசிரியர்

இதையும் படிங்க: கேஸ் ஹீட்டரால் 4 குழந்தைகள் உட்பட 8 கேரள சுற்றுலா பயணிகள் நேபாளத்தில் உயிரிழப்பு!

மாணவர்கள் அறியும் வண்ணம் சரவணன், தாமரைச்செல்வி ஆகிய ஆசிரியர்கள் செயல் விளக்கம் தந்தனர். மேலும், இந்நிகழ்ச்சியை கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு முன் நின்று மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நிலைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

ABOUT THE AUTHOR

...view details