திமுகவின் மாநில விவசாய அணிச் செயலாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி, இன்று கரூரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக தலைமையை ஏற்று கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். என்னிடம் சகோதரனாக தலைவர் பழகினாலும், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் தட்டிக் கழித்து வந்தார். அதற்கு அவர் காரணமல்ல. அவருக்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி இயக்குகிறது என்பதை பின்னாளில் நான் தெரிந்து கொண்டேன். எனவே, இனியும் அவருக்கு தொந்தரவு கொடுக்க விரும்பாததால், திமுகவில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.
ஸ்டாலினை ஒரு சக்தி இயக்குகிறது! - திமுகவிலிருந்து விலகிய சின்னச்சாமி! - சின்னச்சாமி
கரூர்: மு.க.ஸ்டாலின் சுயமாக முடிவு எடுக்க முடியாமல் அவரை வீட்டிலிருந்து ஒரு சக்தி இயக்குவதாக திமுகவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனக்கு தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து எனக்கு பதில் கிடைக்கவில்லை. அதிமுகவை மன்னார்குடி கும்பல் முன்னர் இயக்கியது போல, தற்போது திமுகவில் ஒரு சக்தி உருவாகியுள்ளது. திமுக தலைவர் ஒரு கடுமையான உழைப்பாளி என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இன்னொரு சக்திக்கு கட்டுப்படுபவர் எப்படி ஒரு நல்ல ஆளுமையாக இருக்க முடியும். தற்போது தொண்டர்கள் கையில் அதிமுக உள்ளதால், அதில் இணைந்து பணியாற்ற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எனவே, அதிமுகவில் நாளை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இணைந்து, திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவுள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க:காய்கறி விற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர்!