தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் சமுதாயக் கூடத்தில் 152 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலமாக இன்று (மே. 31) திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, இளங்கோ, மாணிக்கம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அலுவலர்கள், திமுக கரூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நொய்யல் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் - special corona ward opened in karur
கரூர்: இருநூறு படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்துவைத்தார்.
கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்
ஒரு நாளில் 200 நோயாளிகளுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக ஆறு மருத்துவர்கள் தலைமையில் ஒரு செவிலியர், கண்காணிப்பாளர், 10 செவிலியர், நான்கு சுகாதாரப் பணியாளர்கள், நான்கு தூய்மைப் பணியாளர்கள், ஒரு மருந்தாளர், மூன்று தரவு உள்ளீட்டாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தங்குதடையின்றி வழங்குவதற்கு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு குழாய் மூலம் ஆக்சிஜன் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக 7 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 ஆக்ஸிஜன் உருளைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.