கரூர் தொகுதியில் போட்டியிடும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளர் முத்துக்குமார், குளித்தலை தொகுதி வேட்பாளர் சந்திரகுமார் ஆகிய அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று கரூர் பேருந்து நிலையம் முன்பு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய பழனிசாமி, “அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக சார்பில் பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றவர் செந்தில்பாலாஜி. திமுக என்ற கார்ப்பரேட் நிறுவனம் சார்பில் தற்போது கரூர் தொகுதியில் போட்டியிடும் அவர், ஊழல் செய்ததால்தான் அதிமுகவிலிருந்தே விலக்கி வைக்கப்பட்டார். ஆனால், எளிமையாக பழகக்கூடியவர் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும் என்பதை நிரூபிக்கக்கூடிய கட்சி அதிமுக.